2009-01-20

காதல் வாழ்க்கை

காலேஜ் படிப்பது
காஞ்சிபுரம் என்றாலும் ...உனக்காக
காத்திருப்பேன் ... கல் கடுக்க
நீ படிக்கும் எத்திராஜ் வாசலில் ...

எப்போதும் வருவாய்... எப்படியும் வருவாய்
என எண்ணி
எங்கும் போகாமல் நிற்பேன் ...

மதிக்காதது போல் முறைப்பாய் - சில நேரம்
மதிப்பது போல் சிரிப்பாய்

காத்திருப்பது உனக்கத்தான்.

தெரியுமா உனக்கு
தெரியாது எனக்கு



என்னை பார்த்து
சிலர் சிரிப்பர்...
என்னை போல
சிலர் நிற்பர்...

நான்கு மணிக்குதான் வருவாய்
நல்லா தெரியும்
நப்பாசை
நடுவில் வர மாட்டாயோ என ...


இடை பட்ட நேரத்தில்
என்னையே திட்டி கொள்வேன்
நல்லா பொழப்பு என

நாம நல்லா இருந்தா
உன்னை விட நல்ல அழகி
கிடைப்பாள் என ...

பொட்டபுள்ள காலேஜ் ல
பொழுது விடிஞ்சதும்
வந்து நிற்கிறாயே என ...

என்னையே பலவாறு
கேள்வி கேட்டு நிமிர
எதிரே நீ

பார்க்கிறாய்
இதழ் ஓரமாய் மெதுவாய் சிரிக்கிறாய் ...

காலேஜ் படிப்பது
காஞ்சிபுரம் என்றாலும் ...உனக்காக
காத்திருப்பேன் ... கல் கடுக்க
நீ படிக்கும் எத்திராஜ் வாசலில் ...

மச்சம்

நான்
குத்து மதிப்பாய் சொல்வதென்றால்
ஆறடி உயரம் ...எழுவது கிலோ எடை
வெளுத்த கருப்பு ...

நீ
சரியாய் சொல்வதென்றால்
தடி உயரம் .. நாற்பத்தி ஒன்பது கிலோ எடை ....

எடை போட்டு பார்த்தேன்
எனக்கே தெரிந்தது ... சரி
நமக்கு மச்சம் மில்லை ....

மறக்க முயன்றேன்...

ஒரு நாள்
குடுபத்துடன் கோவில் வந்த நீ
உன் அம்மாவிடம்
எனை காட் டி ஏதோ சொன்னாய்...


கனவா என்று நினைக்கயில்
கை பிடித்து என்னை
காதலிப்பதாய் சொன்னாய்...


காரணம் புரியாமல்
நான் நிற்க
காதலுக்கு கண் தேவை இல்லை
எடை போட என்றாய்...

புதிதாய் பிறந்தது போல
எனக்கு...

கண்ணாடியை மறுபடியும்
பார்க்கிறேன் ... அட
உடம்பே மச்சமாய் இருந்தது .

பித்தம்

ஒரு நொடியில்
கவிதை சொல்ல சொன்னால்
உன் பெயரைச சொல்வேன் ...

காவியம் சொல்ல சொன்னால்
நம் காதலைச சொல்வேன் ...

திருப்தி

எனக்கு
நெடு நாள் ஓர் ஆசை
உன்னை நிலவுக்கு
கூட் டி செல்ல வேண்டும் என்று ...

உலக சாதனை
நிகழ்த்த அல்ல...

உன்னை விட... நிலவு
அழகல்ல...என
நிலவுக்கு காட்டத்தான்.

உறவு

விழியால் விசாரிக்கிறாய் ...
சரியில்லை என்றால்
புருவம் உயர்த்துகிறாய் ...
நலம் என்றால்
மெதுவாய் சிரிக்கிறாய்...

கதை சொன்னால்
கரம் பற்றி கேக்கின்றாய்...

கதைக்கு ஏற்ப
சிரிக்கிறாய் ..ஸிநுகுகிறாய்
சின்னதாய் கிள்ளி.. மீண்டும் ஸிநுகுகிறாய்


காலார நடந்தால்
கை பிணைத்து தோள் சாய்கிறாய்...

எனக்கு பிடித்ததை
தேடி சமைத்து முகம் மலர்கிறாய் ...

உன் சந்தோசம் எல்லாம்
நான் சிரிப்பதாய் ஆகினாய்...


நீ பேசியதை ...சிரித்ததை ...
அழகாய் தொகுத்து எழுதி பார்க்கிறேன்
எழுதியதை எடுத்தவாறு
நம் பையன் ஓடுகிறான் ...

பொறுப்பு

கடுங்குளிர்
பனித்துளி போல்... சொட்டு சொட்டாய்
கூந்தலில் நீர் ...

கனுக்கால் தெரிய
சற்று ஏற்றி சொருகிய பாவாடை ...

பளிச்சென நெற்றியில் திரு நீறு
குனிந்து நிமிர்ந்து ரசித்து பார்த்து

நீ போடுகிறாய் கோலம் ....

பார்க்க கோடி
சந்தோசம் எனக்கு


ஆனால் . உன்னைப்போல்
அழகாய் போன கோலத்தை
அடுத்த நாள் வரை
காக்க வேண்டிய சங்கடமும் எனக்கு ...

மனசு

பெண்கள்
அழகாய் இருப்பவர்களைத் தான்
காதலிப்பார்கள் என்று நினைத்தேன் ...

பிறகு எப்படி நீ ... என்னை

கண்ணாடியைபப் பார்க்கிறேன்
உன் பார்வை தான்
என்னையும் அழகாக்ககியதோ ...

ஏக்கம்

உன்னுடன்
பேசும் போது மணி காட்டும்
கடிகாரத்தின் மீது கோபம்...

உன்னை பிரிந்து
இருக்கும் போது மணி காட்டும்
கடிகாரத்தின் மீது கோபம்...

வரவு

வரும் போதும்... போகும் போதும்...
வாசல் கதவை ... தினமும்
துடைத்து விட்டுப் போகிறேன் ...

அது ...நீ
வரப் போகும் வழி என்பதால் ...

பிடிப்பு

விழுந்து விழுந்து படித்த
வீட்டு பாடங்கள்
விடிந்ததும் மறந்து விடுகிறது ...

விளையாட்டாய் நீ
சொல்லிப்போன
வார்த்தைகள் எல்லாம்
விக்க்கலாய்
வந்து வந்து போகிறது ...

ஏனடி இப்படி ஒரு
பௌதிக மர்ற்றம்...

பார்வை

கூப்பிடும தூரத்தில்
நிற்கிறாய்
கடல் கடந்து இருப்பதாய்
தோன்றுகிறது

கண் காண தூரத்தில்
இருக்கிறாய்
கண்ணுக்குள் இருப்பதாய்
தோன்றுகிறது ...