2009-01-23

கை வண்ணம்





காலம்

உன்னை பிரிந்து இருந்த
நாட்கள்
வேண்டுமானால் கூடுதலாய்
இருக்கலாம் ...

உன்னை மறந்து இருந்த
நாட்கள்
இது வரை சுவாசிக்க மறந்தது இல்லை ...

வேண்டுதல்

ஒவ்வொரு முறை
கோவிலுக்கு போகும் போது
நான் ஒன்று வேண்டிக் கொள்வேன் ...

நீ
வேண்டியதெல்லாம்
நிறைவேற வேண்டும் மென ....

வழி

நேற்றும்
நீ வரும் பாதையில்
காத்திருந்தேன் ...

நீ
வருவாயா மாட்டாயா
எனக்கு தெரியாது ...

ஆனாலும்
நீ வரும் பாதையை
பார்த்து ரசிப்பதில் ஓர்
பரவசம்...